மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் சந்திப்பு

சென்னை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத் இன்று காலை சந்தித்து பேசினார்.

மோடி அரசை அகற்றும் நோக்கில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயலாற்றும் நோக்கத்தில் செயல்பட்டு வரும் நிலையில், நேற்று ஆந்திர முதல்வர சந்திரபாபு நாயுடு மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆதரவு கோரினார்.

ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத்

அதைத்தொடர்ந்து விரைவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான சஞ்சய் தத் இன்று மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வருகை தந்தார். அவரை மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மு.க.ஸ்டாலினுக்கு சஞ்சய் தத் மலர்க்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தினார்.

பின்னர் ஸ்டாலினுடன் சஞ்சய் தத் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இந்த சந்திப்பின்போது, திமுக எம்.பி.யும், பொருளாளருமான டி.ஆர்.பாலு உடனிருந்தார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  இன்று (10-11-2018) சென்னை ஆழ்வார்பேட்டையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது, தி.மு.கழக முதன்மைச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர். பாலு உடனிருந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.