6 மற்றும் 7ந்தேதி விருப்பமனு அளித்தவர்களிடம் நேர் காணல்! கே.எஸ்.அழகிரி அறிக்கை…

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் வரும் 6, 7ந்தேதி ஆகிய இரு நாட்களில் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நேர் காணல் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து  அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நடைபெறவுள்ள 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் தோழர்களிடமிருந்து பிப்ரவரி 25 முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
விருப்ப மனு அளிக்க இறுதி நாள் மார்ச் 5ம் தேதி ஆகும்.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 மற்றும் 7 -ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேர்காணல் நடைபெறவுள்ளது.
விருப்பமனுவினை சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நடைபெறும் நேர்காணலில் அவசியம் பங்கேற்கவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.