தமிழகத்தில் இன்று மேலும் 1,464 பேருக்கு கொரோனா பாதிப்பு: 14 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு:  மாநிலத்தில் புதியதாக 1,464 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,76,174 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 396 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும்  14 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,669 ஆக அதிகரித்து உள்ளது.

1,797 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டு மொத்தமாக மொத்தம் 7,53,332 பேர் குணமடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

You may have missed