தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று 66 பேர் பலி: மொத்த உயிரிழப்பு 2000ஐ தாண்டியது

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 66 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றுகள் குறித்த அறிவிப்பை சுகாதாரத் துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியான தகவலில் தமிழகத்தில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம், கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,42,798 ஆக அதிகரித்து உள்ளது. மொத்தம் 87,111 ஆண்களும், 55,664 பெண்களும், 23 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 66 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு 2,032 ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3035 பேர் குணமடைய, ஒட்டு மொத்த எண்ணிக்கை 92,567 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்றைய உயிரிழப்பு விவரம் வருமாறு:

சென்னை -24

செங்கல்பட்டு -7

திருச்சி -5

மதுரை -4

ராமநாதபுரம் -4

காஞ்சிபுரம் -3

சிவகங்கை -3

தஞ்சை -3

திருவள்ளூர் -2

தூத்துக்குடி -2

சேலம் -2

தேனி -1

தி.மலை -1

தென்காசி -1

விருதுநகர் -1

திருப்பூர் -1

கிருஷ்ணகிரி -1

கரூர் -1