அனைத்துவகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு: காவல்துறை டிஜிபி அதிரடி உத்தரவு

சென்னை: அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 69 ஆக அதிகரித்துள்ளது. அதில், மகாராஷ்டிராவில் 416 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து, நாடு முழுவதும் பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 2,372 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது 2ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அனைத்து வகை சரக்கு வாகனங்களுக்கும் தணிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறி உள்ளதாவது: சரக்கு வாகனங்களை காவலர்கள் தடுத்தி நிறுத்தி சோதனை செய்ய வேண்டாம்.  சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் பாஸ் கேட்க வேண்டாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.