மதுரை,

மிழக டிஜிபி யாக டி.கே.ராஜேந்திரனை தமிழக அரசு பதவி நீட்டிப்பு செய்தது செல்லும் என்ற மதுரை ஐகோர்டு கிளை உத்தரவிட்டு உள்ளது.

புகாரை விசாரிக்க  லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் தலைமையில் ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், இரண்டு வாரத்திற்குள் ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் தலைமை செயலாளருக்கு மதுரை உயர்நிதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசு, டி.ஜி.பி. ராஜேந்திரன்கு மேலும் 2 ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கியது.

இதை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தலைமைச் செயலர், வருமான வரித்துறை, விஜிலன்ஸ் துறையினருக்கு ஆவணத்தை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பாக ஆவனங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, நீதிபதி தமிழக அரசின் ஆவணங்களை ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

மேலும்,   தமிழக டிஜிபி யாக டி.கே.ராஜேந்திரனை தமிழக அரசு பதவி நீட்டிப்பு செய்தது செல்லும் என்ற மதுரை ஐகோர்டு கிளை உத்தரவிட்டு உள்ளது.