கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

 

சென்னை :

மிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட வாரியான பட்டியல்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1534 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,74,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,655 பேர் உயிர் இழந்து 7,51,535 பேர் குணம் அடைந்து தற்போது 11,520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும் 467 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,13,417 பேர் பாதிக்கப்பட்டு இதில் 2,05,378 பேர் குணம் அடைந்து தற்போது 4,206 பேர் சிகிச்சையில் உள்ளனர், 3,833 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது இங்கு இன்று 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கோவை மாவட்டத்தில் 47,975 பேர் பாதிக்கப்பட்டு 603 பேர் உயிர் இழந்துள்ளனர். 46,693 பேர் குணம் அடைந்து தற்போது 679 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 89 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 40,592 பேர் பாதிக்கப்பட்டு 39,383 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 559 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் இங்கு இதுவரை 650 பேர் உயிர் இழந்துள்ளனர்.