சென்னையில் தற்போது கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,287: சுகாதாரத் துறை தகவல்

--

சென்னை:
சென்னையில் இன்று 1132 பேர் கொரோனா தொற்றிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட வாரியாக முழு விவரம்…

அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 742 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 01 ஆயிரத்து 913 ஆக உயர்ந்துள்ளது.

ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் அதிகபட்சமாக 1,177 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,21,450 ஆக அதிகரித்தது. சென்னையில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,287 ஆக உள்ளது.