சென்னை,

மிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்)  3 ம் தேதி வெளியிடப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறுவது வழக்கும். அதுபோல் தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.  அதன் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதால், இறுதிப்பணி நடைபெற்று வருகிறது.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 3ம் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து புதிய வாக்காளர்  பெயர் சேர்ப்பு மற்றும் இடம் மாறுதல், இறந்தவர்கள் குறித்த  திருத்தம் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு சிறப்பு முகாம்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடத்தப்படும்.

அதைத்தொடர்ந்து முழுமையான வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு,  திருத்தப்பட்ட புதிய வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் வெளியிடப்படும்.

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் ஐந்து கோடியே 93 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.