சென்னை: 9,10,11 ஆல்பாஸ் அறிவிப்பு வெளியான நிலையில்,  9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு வழக்கம் போல கற்றல் கற்பித்தல் நடைபெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

9,10,11ம் வகுப்பு மாணவர்கள், கடந்த ஆண்டைப்போல, இந்த ஆண்டும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் இன்று அறிவித்த நிலையில், 9,10,11ம் வகுப்பு  மாணவர்கள் நாளை முதல் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை  அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் பரவின. ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மீண்டும் திறக்கப்பட்டன. முதல்கட்டமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து, 9வது. 10, 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் தொடங்கப்பட்டன. மேலும் பாடத்திட்டங்களும் 40 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டன.

இந்த நிலையில், 9,10,11ம் வகுப்பு  பொதுத்தேர்வு அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில்,  இன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடபபாடி பழனிச்சாமி பேசும்போது, 2020-21 ஆம் கல்வியாண்டில் 9, 10, 11-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.

இந்த நிலையில்  நாளை முதல் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.

ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, வழக்கம் போல 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு, கற்றல் கற்பித்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.