நிவாரண பொருட்களுக்கு ரயில்களில் கட்டண விலக்கு: ரயில்வே அமைச்சருக்கு எடப்பாடி கடிதம்

சென்னை:

ஜா புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ரயில் மூலமாக அனுப்பப்படும் புயல் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்  என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த 15ந்தேதி தமிழகத்தை உலுக்கிய கஜா புயலுக்கு நாகை, திருவாரூர், தஞ்சை, வேதாரண்யம், புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்பட பல மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகள் அடைந்துள்ளன.

அந்த பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தவிர தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் நிவாரணங்கள் வழங்கியும், அனுப்பியும் வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்புவதற்கு பல தனியார் சரக்கு வாகனங்கள், பேருந்துகள் கட்டணமில்லாமல் எடுத்துச்சென்று வருகின்றன. இந்த நிலையில், ரயிலில் அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சார்பில், மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.