தேர்தல் முடிவு குறித்த தமிழிசையின் கருத்தில் மரண ஓசை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை:

5மாநில தேர்தல் முடிவுகள் குறித்த தமிழிசையின் கருத்தில் மரண ஓசை தெரிகிறது என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி உள்ளார்.

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது என்றவர்,  வெற்றியால் பாஜக துள்ளிக்குதிப்பதும் இல்லை, தோல்வியால் துவள்வதும் இல்லை என்றவர்,  5 மாநில பேரவை தேர்தல் தோல்வி வெற்றிகரமான தோல்வி என்று  தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்,  தமிழிசையின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.

அப்போது, 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்த தமிழிசையின் கருத்தில் மரண ஓசை வெளிப்பட் டுள்ளது… விரக்தியின் உச்சகட்டத்திற்கே தமிழிசை சென்றுவிட்டார்.  அவர், பாஜகவில் இருந்து விலக வேண்டும் என்று கூறினார்.

மேலும், பிரதமர் மோடியை வீழ்த்தக்கூடிய சக்தியாக ராகுல் உருவெடுத்துள்ளார், விரைவில் அவர் பிரதமராக வரக்கூடிய சூழல் உள்ளது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஈவிகேஎஸ்,  கஜா புயல் நிவாரணத்திற்கு போர்வை கொள்முதல் செய்வதில் தமிழக அரசு கமிஷன் பெறுகிறது என்றும் குற்றம் சாட்டினார்.