பயிர் பாதுகாப்பு காப்பீடு ரூ.3, ரூ,5 மற்றும் ரூ.10 பெற்ற தமிழ்நாடு விவசாயிகள்

சென்னை

மிழ்நாட்டில் பயிர் பாதுகாப்பு காப்பீடு தொகையாக ரூ.3,ரூ,5 மற்றும் ரூ 10 என காசோலைகளாக வழங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி கூறி உள்ளார்.

தமிழ் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு காப்பீடு தொகை காசோலைகளாக வழங்கப்பட்டு வருகிறது.    இந்த இழப்பீட்டு தொகைகள் குறித்து சட்டப் பேரவையில் விவாதம் நடைபெற்றது.   அந்த விவாதத்தில் எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர் பிச்சாண்டி மற்றும் செயல் தலைவர் மு க ஸ்டாலின் ஆகியோர் கலந்துக் கொண்டு பேசி உள்ளனர்.

பயிர் பாதுகாப்பு காப்பீடு தொகையாக ரூ, 5 க்கு அளிக்கப்பட்ட காசோலை ஒன்றை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சாண்டி அவையில் அளித்தார்.  அப்போது அவர், வங்கி கணக்கு துவங்கவே ரூ. 500 தேவைபடும் போது இது போன்ற காசோலைகளை விவசாயிகளுக்கு தருவது எந்த ஒரு பயனும் இல்லை என கூறினார்.  அப்போது திமுக செயல் தலைவர் பலருக்கு ரூ.3, ரூ.5 மற்றும் ரூ.10 என காசோலைகளை இந்த அரசு வழங்கி உள்ளதை சுட்டிக் காட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, “திண்டுக்கல்லில் இது போல 5 புகார்களும் திண்டுக்கல்லில் ஒரு புகாரும் வந்துள்ளது.    இது குறித்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.”  என்றார்.   விவசாய அமைச்சர் துரைக்கண்ணு, “பயிர் பாதுகாப்புத் தொகையை அதிக அளவில் அளிப்பது தமிழ் நாடு மட்டுமே” எனக் கூறினார்.

அமைச்சர் ஓ எஸ் மணியன், “தற்போது பணியாளர்கள் குறைவாக உள்ளதால் இது போன்ற பிழைகள் ஏற்படுகின்றன.   இது குறித்து வங்கிகளுடன் பேசப்பட்டுள்ளது.    இவ்வாறு சுமார் 2 அல்லது 3% பேருக்கு இது போல் காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.   அதை சரி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.  வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்குள் இவை சரி செய்யப்படும்”  என கூறினார்

கார்ட்டூன் கேலரி