டில்லியில் தமிழக விவசாயிகள் வளையல் உடைத்து ஒப்பாரி போராட்டம்!

டில்லி,

லைநகர்  ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 34வது நாளாக தொடர்கிறது.

இதற்கிடையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் டில்லியில் பிரதமரை சந்திக்க இருக்கிறார்கள்.

தமிழகத்தில்  வறட்சி காரணமாக  400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே,  தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிநீர் இணைக்க வேண்டும், விவசாயிகளுக்கு பென்சன்  என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 34வது நாளாக தொடர்ந்து வருகிறது.

பல வகையான போராட்டங்கள் நடத்தியும், பிரதமர் மோடியும், மத்திய அரசும் இதுவரை விவசாயிகளுக்கு ஆதரவான எந்தவித தகவல்களையும் சொல்லாத நிலையில் இன்று34து நாளாக  புடவை அணிந்து கொண்ட விவசாயிகள், வளையல்களையும் அணிந்து கொண்டு, அவற்றை உடைத்து ஒப்பாரி வைத்து அழுது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, அய்யாக்கண்ணு கூறியதாவது

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க மத்திய அரசு ஏன் மறுப்பு தெரிவிக்கிறது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனால், மத்திய, மாநில  அரசுகள் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற செவிசாய்க்காமல் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.