தமிழக மீனவர்களின் 118 படகுகள் விடுவிப்பு: இலங்கை அதிகாரிகள் தகவல்

கொழும்பு:

லங்கை பறிமுதல் செய்திருந்த தமிழக மீனவர்களின் 118 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ள தாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இலங்கை கடற்பகுதிகளில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி, தமிழக  மீனவர்கள் மற்றும் அவர் களது படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வந்தனர். இது தமிழக மீனவர் களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தது. தங்களது வாழ்வாதாரம் நசுக்கப்படு வதாக குற்றம்சாட்டி வந்தனர்.

தங்களது படகுகளை மீட்டுத்தர வேண்டும் என்று, தமிழக மற்றும் இந்திய வெளியுறவுத்து துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். தங்களது படகை மீட்டுத் தர வேண்டும் அல்லது,  இலங்கை பறிமுதல் செய்த படகுகளுக்கு இழப்பீடு வழங்குமாறு தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதுகுறித்து தமிழகஅரசும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. மத்திய அரசும் இலங்கை அரசிடம் இருகுறித்து பேசி வந்தது.

இந்த நிலையில் இலங்கை வசம் இருந்த  தமிழக மீனவர்களின் மேலும் 118 படகுகள் விடுவிக்கப் பட்டு விட்டதாகவும், இந்த படகுகள் அனைத்தும் இலங்கை வெளியுறவுத்துறையிடம் ஒப்ப டைக்கப்பட்டு உள்ளதாகவும்,  விடுவிக்கப்பட்ட 118 படகுகளும் வழக்கமான நடைமுறை களின்படி, விரைவில் தமிழகம் அனுப்பி வைக்கப்படும்  என்றும் இலங்கை மீன்வளத்துறை  அதிகாரிகள் தெரிவித்து உள்ளது.