7 பேர் விடுதலை: அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார்….சுப்ரமணியன் சுவாமி

டில்லி:

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் என்று சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழ அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறுகையில்,‘‘இது தமிழக அரசின் பரிந்துரை மட்டுமே. இது தமிழக ஆளுநரை நிர்பந்திக்காது. தனது சொந்த விருப்பத்தின்படி முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆவணங்களை அவர் ஆய்வு செய்து, தமிழக அரசின் கோரிக்கையை ஆளுநர் நிராகரிப்பார் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.