Random image

ஸ்டெர்லைட் விவகாரம்: என்ஜிடி உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்

டில்லி:

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் என்ஜிடி எனப்படும் நேஷனல் பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை  எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதி மன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில், தமிழக அரசு சார்பில் மீண்டும் உச்சநீதி மன்றத்தில்  இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு  செய்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகவே பல உத்தரவு களை பிறப்பித்து வருகிறது.

இதை எதிர்த்தும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடைவிதிக்க கோரியும் தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசா ரிக்கும் உச்சநீதி மன்றமும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு  தடை விதிக்க மறுத்து வருகிறது.

இது தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதி மன்ற தீர்ப்பு தமிழக அரசுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.