காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு…

சென்னை

தமிழக காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற, மத்திய ஆயுதப் படைப் பிரிவின் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா ஊரடங்குச் சூழலில் மக்கள் பணியாற்ற காவலர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.

இந்நிலையில் மத்திய ஆயுதப் படைப் பிரிவில் (Central Armed Police Force)  ஓய்வு பெற்ற வீரர்களை, காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற வருமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வயது வரம்பு 40 முதல் 50 வரை இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளோர் அவரவர் வசிக்கும் இடங்களில் அமைந்துள்ள மாவட்ட எஸ்பி மற்றும் மாநகர ஆணையர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.