அக்டோபர் 28ம் தேதி அரசு விடுமுறை என அறிவிப்பு !

வரும் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அக்டோபர் 28ம் தேதியையும் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு வரும் 27ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 26 மற்றும் 27ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை நாளை மேலும் 1 நாள் நீட்டிக்க பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்று 28ம் தேதியையும் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ள. இதன் மூலம் அக்டோபர் 26, 27, 28 ஆகிய மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மூன்று நாட்களும், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாது என்றும், விடுமுறை நாட்களுக்கு பதிலாக நவம்பர் 9ம் தேதியை பணி நாளாக கடைபிடிக்கும் படியும் அரசு அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி