அரசுக்கு களங்கம்: ஸ்டாலின்மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு

சேலம்:

மிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக திமுக தலைவர்  ஸ்டாலின்மீது சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் 18ந்தேதி சேலத்தில் நடைபெற்ற திமுக  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சேலம் நீதிமன்றத்தில் தமிழக அரசு ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது.

செப்.18 அன்று சேலம் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம்

கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தனது முதல் ஆர்ப்பாட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் சேலத்தில் நடத்தினார்.

அப்போது காட்டமாக பேசிய ஸ்டாலின்,  மனித உரிமைகளை தமிழக அரசு அடகு வைத்துள்ளது என்றும், தமிழக மக்கள் பார்க்காத ஊழல்களை அதிமுக அரசு செய்து வருவதாகவும்,  தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் ஊழல் ஆட்சி தற்போது இருக்கும் அரசு பதவி விலக வேண்டும் என அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் நினைக்கிறார்கள் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராக இருக்க வேண்டும் என்று பேசினார்.

மேலும், ஊழல் செய்வதில் யார் சிறந்தவர் என்று போட்டி வைத்தால் எல்லா அதிமுககாரர்களும் முன்னிலையில் இருப்பார்கள். யாரின் மகன் நான் என்ற ஆதாரத்துடன்தான் பேசுகிறேன். நான் கருணாநிதியின் மகன். தைரியம் இருந்தால், நான் பேசியதில் தவறு என்றால் வழக்கு போடட்டும். அவர்களால் போட முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு அவர்கள் மீது உள்ள வழக்குகளை எதிர்கொள்ளவே நேரம் இல்லை. அதற்காக நீதிமன்றம் போகவே நேரம் இல்லை என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், ஸ்டாலின் மீது அதிமுக அரசு சேலம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.