தமிழக அரசின் தீபாவளி விடுமுறை சலுகை

--

தீபாவளி பண்டிகைக்கு  தனது ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழக அரசு விடுமுறை சலுகை அளித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 6ஆம் தேதி செய்வாய்க்கிழமை கொண்டாடப்படவுள்ளது.  சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவார்கள். இதனால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்று தீபாவளியை கொண்டாடுபவர்கள் திங்கட் கிழமை விடுப்பு பெற்றுக்கொண்டு வெள்ளி இரவு செல்வார்கள். திங்கட்கிழமை விடுப்பு எடுக்க முடியாத அரசு ஊழியர்கள் சென்னையிலேயே தீபாவளி கொண்டாட வேண்டிய நிலை.

இதைக் கருத்தில் கொண்டு, திங்கட் கிழமையான நவம்பர் 5ஆம் தேதியை அரசு விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  5ஆம் தேதி விடுமுறையை ஈடுகட்ட  நவம்பர் 10ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நவம்பர் 5ஆம் தேதி கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.