தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி திடீர் ராஜினாமா: முத்துக்குமாரசாமிக்கு பதவி

--

சென்னை:

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல். சோமையாஜி திடீரென  இன்று ராஜினாமா செய்தார்.   அவருக்குப் பதிலாக புதிய தலைமை வழக்கறிஞராக ஆர். முத்துக்குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய நவநீதகிருஷ்ணன் 2013-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து  அரசு தலைமை வழக்கறிஞராக ஏ.எல். சோமையாஜி நியமிக்கப்பட்டார்.

 

சோமையாஜி
சோமையாஜி

புதிய தலைமைச் செயலகக் கட்டட விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆஜராகி தமிழக அரசுக்கு ஆதரவாக வாதாடி, வெற்றி பெற்றவர் இவர்.

இந்த நிலையில் இன்று திடீரென சோமையாஜி இன்று திடீரென தனது  ராஜினாமா கடிதத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தார்.  இதையடுத்து புதிய தலைமை வழக்கறிஞராக முத்துக்குமாரசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது.