Random image

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக மத்திய நீர்வளத் துறை அறிக்கை….தமிழக அரசு எதிர்ப்பு

சென்னை:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விட மாட்டோம் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் நீர் மாசுபாடு குறித்து மத்திய நீர்வளத்துறை தூத்துக்குடியில் ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய நீர்வளத்துறைக்கு தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘தூத்துக்குடியில் நீர்வளத்துறையின் ஆய்வு தேவையற்றது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வு நடத்தியது வீணானது. தூத்துக்குடியில் தற்போதுதான் அமைதி திரும்பி உள்ள நிலையில் இந்த ஆய்வால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆய்வறிக்கையை திரும்ப பெற வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதில், ‘‘நிலத்தடி நீர் தொடர்பான மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் ஆய்வு அறிக்கை அறிவியல் பூர்வமானதாக இல்லை. ஆய்வின் முடிவுகள் ஆலை நிர்வாகத்துக்கு சாதகமாக உள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாகவே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது. தமிழக அரசை கேட்காமல் நீர் வளம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது சரியல்ல’’ என்று தெரிவித்துள்ளார்.