மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நிறுத்தம்….தமிழக அரசு

சென்னை:

எம்பிபிஎஸ், பல் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கவுன்சிலிங் நிறுத்தப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கவுன்சிலிங் வரும் 16, 17, 18ம் தேதிகளில் நடக்க இருந்தது. இந்நிலையில் தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இதை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை 2ம்கட்ட மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.