சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன் ஒரு மாதம் சாதாரண விடுப்பு கோரிய மனுவை தமிழக அரசு  நிராகரித்து உள்ளது என சென்னை  உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான 7 பேரில்  ரவிச்சந்திரனும் ஒருவர். இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  இவர்கள் 7 பேரையும் விடுவிக்க கோரி பலமுறை முறையிட்டும், மத்தியஅரசு விடுதலை செய்ய மறுத்து வருகிறது.

இந்த நிலையில், கைதி  ரவிச்சந்திரனுக்கு 2மாதம் விடுப்பு  வழங்கக்கோரி உயர்நீமன்ற மதுரை கிளையில் அவரது தாயார் ராஜேஸ்வரி  மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த மாதம் மனு செய்திருந்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது  தேர்தல் நேரம் என்பதால் இச்சூழலில் ரவிச்சந்திரனுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் அரசுத ரப்பு தெரிவிக்கப்பபட்டது.

இந்த நிலையில்,  வழக்ககின் கடந்த விசாரணையின்போது, ரவிச்சந்திரனுக்கு ஒரு மாத காலம் சாதாரண விடுப்பபு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து தமிழகஅரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவிச்சந்திரனுக்கு 1மாதம் விடுப்பு வழங்க  தமிழக அரசு மறுத்துவிட்டது என்று கூறியவர், அவரது வீடு அமைந்துள்ள பகுதி அருகே இலங்கை தமிழர்களின்   முகாம் உள்ளதால், அவருக்கு விடுப்பு வழங்க முடியாது என தெரிவித்து இருப்பதாக கூறினார்.

அரசின் பதிலைத்தொடர்ந்து,  ரவிச்சந்திரனின் பரோல் வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

ரவிச்சந்திரன் சொநத ஊர் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை  அருகே உள்ள மீனாம்பிகை நகர். இவருக்கு ஏற்கனவே  கடந்த 2020ம்  நீதிமன்றம் அவருக்கு 16 நாள் பரோல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.