அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்… ஓய்வு பெறும் வயது 59ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில் அரசுப் பணியாளர்ள் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது  58ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நடைமுறை உடனே அமலுக்கு வருவதாக தமிழக  முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

“தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 இல் இருந்து 59 வயதாக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே, கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த அரசு மருத்துவர்கள், செவிலி யர்கள், மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு மேலும் 2 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.