சென்னை :

டகத்துறைகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள்,  செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முழுச்செலவையும் அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  கொரோனா பணக்காரர்களின் நோய்; ஏழைகளை ஒருநாளும்த பாதிக்காது என்று தெரிவித்தார்.

மேலும்,  பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டால் மொத்த செலவையும் அரசு ஏற்கும் என்றும் அறிவித்தார்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் , பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுஉயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் கூறினார்.

வருகிற 20ம் தேதி முதல் ஊரடங்கு விதிகளை தளர்த்துவது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கைகளை பொறுத்து ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.