தீபாவளி பண்டிகை: தமிழக கவர்னர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக கவர்னர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக மக்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.  வாழ்த்து.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்:

தீபாவளி திருநாள் தமிழக மக்கள் வாழ்வில் ஒளியையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தட்டும்ங மேலும், தீபாவளி திருநாளுக்கு இதயப்பூர்வ வாழ்த்துகள் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்  குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர்:

மக்களின் மனங்களிலும், வாழ்விலும் ஒளி வீசி மகிழ்வோடு வாழ வேண்டும். இதிகாசகால நரகாசுரன் அழிந்தா லும் பல நரகாசுரர்கள் மத்தியில் இன்னும் சிக்கி மக்கள் அல்லல்படுகிறார்கள். மக்கள் மகிழ்வோடு வாழ தீமையை ஒழித்து நன்மையை வளர்க்க உறுதி ஏற்போம்.

தேமுதிக  கட்சி தலைவர் விஜயகாந்த்:

தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அநீதி அழிந்து, நீதி தழைத்திட மக்களுக்கு நல்வாழ்வு அமைய வேண்டும் என்றும் விஜயகாந்த் தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் 

தமிழக மக்களின் வாழ்வை ஒளிமயமாக்க உழைப்பதற்கு உறுதி ஏற்க வேண்டும். தீபஒளி திருநாளின்போது மக்களிடையே நிலவும் மகிழ்ச்சி ஆண்டு முழுவதும் நீடிக்க வேண்டும்.

த.மா.கா. தலைவர் ஜிகே வாசன் வாழ்த்து 

நாட்டில் நால்லாட்சி மலர, ஊழல் ஒழிய, அறநெறிகளை பொதுவாழ்வில் கடைபிடிக்க வழி பிறக்க வேண்டும். தமிழக மக்களுக்கு என் தீபாவளி வாழ்த்துக்கள்.

மேலும், , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்டோரும், தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed