பிரதமர் மோடியுடன் டில்லியில் தமிழக ஆளுநர் திடீர் சந்திப்பு

டில்லி:

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை குறித்து இருவரும் விவாதித்தாக கூறப்படுகிறது.

தலைநகர் டில்லியில் நடைபெற்ற 2நாள் மாநில ஆளுநர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள டில்லி சென்றிருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால், மாநாடு முடிவடைந்ததை தொடர்ந்து  நேற்று மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை திடீரென ஆளுநர் பன்வாரிலால் சந்தித்துப் பேசினார். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி  விவகாரம் தொடர்பாக ஆளுநர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பிரதமர் மோடி ஆளுநரை சந்திக்க மறுத்துவிட்ட நிலையில், இன்று சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சந்திப்பின்போது,  தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்தும, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் குறித்தும்  ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: tamilnadu governor banwarilal prohit meets prime minister modi, பிரதமர் மோடியுடன் டில்லியில் தமிழக ஆளுநர் திடீர் சந்திப்பு
-=-