மோடியை சந்திக்க பன்வாரிலால் திடீர் டில்லி பயணம்….! மேகதாது காரணமா?

சென்னை:

மிழகத்தில் மேகதாது அணை விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்  திடீரென இன்று டில்லி பயணமாகிறார்.

ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்யக்கோரி அரசியல் கட்சிகள் ஆளுநர் பன்வாரி லாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. தற்போது மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக மாநில அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருவது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேகதாது அணை தொடர்பாக   கா்நாடகா நீா்வளத்துறை அமைச்சா் சிவக்குமாா், மத்திய நீர்வளத்துறை செயலாளர்மசூத் ஹூசைன்  மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதி மன்றத்தில் தொடா்ந்துள்ளது.  மேலும்,  தமிழக அரசு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, மத்திய அரசுக்கு எதிராக ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.

இந்தநிலையில், தமிக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை சந்திக்க இன்று டெல்லி செல்கிறார். அங்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு இன்று  மாலையே  சென்னை திரும்புகிறார்.