சென்னை:
பூரண மதுவிலக்கு என்பதே அரசின் நோக்கம், ஆனால் அதை உடனடியாக அமல்படுத்த முடியாது என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சரான ஜெயக்குமார் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்க ளுக்கு உடனுக்குடன் பதில் அளிப்பதில் கில்லாடி. நேற்று கோயம்பேடு விவகாரத்தில், திமுக உள்பட எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தவர்,  தி.மு.க. போல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று  செய்ய முடியாது. வியாபாரிகளுக்கு நஷ்டம்,  விவசாயிகளுக்கும் தான் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில்கொண்டே  சமயோசிதமாக முடிவு எடுத்ததாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பது தொடர்பாக தமிழகஅரசு உச்சநீதி மன்றம் வரை சென்று போராடி அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  டாஸ்மாக்கை மூடுவ தால் வருவாய் இழப்பு ஏற்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தோம் என்று கூறியவர்,  ஒரு மாநிலத்தில் மட்டும் மதுக்கடைகளை மூடினால் மற்ற மாநிலத்தில் விற்பனை செய்யப்படாது என்பது என்ன நிச்சயம் என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகஅரசின் நோக்கமே பூரண மதுவிலக்குதான், ஆனால்,  பூரண மதுவிலக்கு என்பதை உடனடியாக அமல்படுத்த முடியாது என்று கூறி உள்ளார்.
அமைச்சரின் அலம்பல் பேச்சு எப்போதும்போல சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.