கிராம சபை கூட்டங்களுக்கு அனுமதி கூடாது – தமிழக அரசு

சென்னை:
கிராமசபைக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ஆளும் அதிமுக அரசுக்கு எதிரான தேர்தல் பிரசார பரப்புரையின் ஒருபகுதியாக திமுக சார்பாக கிராமசபைக் கூட்டங்களை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஒருசில இடங்களில் கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராமசபைக் கூட்டங்களை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக வியாழனன்று தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் நடத்தப்படும் கிராமசபைக் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது  என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.