பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை

சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன்மணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அர்சு மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில காலமாக சிலை கடத்தல் அதிகரித்து வருவது தெரிந்ததே. அந்த சிலை கடத்தலை கண்டுபிடிக்க காவல் துறை தனிப் பிரிவை அமைத்துள்ளது. அந்தப் பிரிவின் ஐஜி யாக பொன் மாணிக்கவேல் பதவி வகித்து வந்தார். அவர் தலைமையிலான காவல் படை பல சிலை கடத்தல்களை கண்டு பிடித்தன.

இதனால் மக்கள் மத்தியில் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது தனி மதிப்பும் மரியாதையும் உண்டானது. ஐஜி பொன் மாணிக்கவேலின் பதவிக்கால் கடந்த 30ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. அன்றுடன் அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதக இருந்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவின் படி அடுத்த ஒரு வருடத்துகு அவரை சிலை தடுப்புப் பிரிவு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்றம் நியமித்தது. இதற்கு பொதுமக்களிடையே கடும் வரவேற்பு உண்டானது.

ஆனால் ஐஜி பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்துடன் இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் சங்கமும் மேல் முறையீடு செய்ய உள்ளது. பொன் மாணிக்கவேலின் பதவியை நீட்டிக்க உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என முறையிட உள்ளதாக சொல்லப்படுகிறது.