சென்னை: கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடுவதில் சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் உயிரிழந்தோர் உள்ளிட்ட தகவல்கள் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்கள் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

கொரோனா பாதிப்பு விவரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடுகிறது. இறப்பு, பரிசோதனைகளை குறைத்துச் சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. கொரோனா பாதிப்பு விவரங்களை அரசு மறைக்கிறது என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல.

இந்தியாவில் அதிகபட்சமாக தமிழகத்தில் தான் 5,60,673 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 15,892 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

ஆதாரம், புள்ளி விவரத்துடன் விவரங்களை கூற வேண்டும். தடுப்பூசி மருந்துகள் இல்லாமல் உயிர்காக்கும் வழிமுறைகளை அரசு பின்பற்றுகிறது. கொரோனா பரிசோதனைக்கு ஐசிஎம்ஆர் கட்டணம் ரூ.4,500 ஆக நிர்ணயித்த நிலையில் அரசு ரூ.3000 ஆக குறைத்துள்ளது என்று கூறினார்.