கேரளா நிவாரணம்: தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரு நாள் சம்பளம் வழங்கல்

சென்னை:

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 400 பேர் வரை இறந்துள்ளனர். ஆயிரகணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கேரளாவுக்குள் நாடு முழுவதும் மட்டுமின்றி உலகளவில் நிவாரண உதவிகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

இத்தகவலை தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்க தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.