மருத்துவ உலகின் முன்னோடி தமிழ்நாடு : வெங்கையா நாயுடு

சென்னை

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மருத்துவ உலகின் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டி உள்ளார்.

இன்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் டாக்டர் எம் ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நடந்தது.  இந்தப் பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழாவான இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அவருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் ஜெயக்குமார்.   துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரும்  கலந்துக் கொண்டார்கள்.   மாணவ மாணவிகளுக்கு துணை ஜனாதிபதி பட்டங்களை வழங்கினார்.   அதன் பிறகு துணை ஜனாதிபதி சிறப்புரை ஆற்றினார்.

அவர் தனது உரையில், “தமிழ் மொழியும் தமிழ்நாடும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானவரி.   உலகின் மிகவும் தன்னலமற்ற துறை மருத்துவத் துறை ஆகும்.   அந்த மருத்துவத் உலகின் முன்னோடியாக திகழ்வது தமிழ்நாடு ஆகும்.   சென்ற பட்டமளிப்பு விழாவின் போது ஜெயலலிதா கலந்துக் கொண்டார். தற்போது அவர் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ஆயுஷ்மான் பாரத் எனும் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்க உள்ளது.    மருத்துவ துறையில் தனியாரை அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு பரவலான சேவை கிடைக்க அது வழி வகுக்கும்” என கூறி உள்ளார்.