தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் 2பேர் நியமனத்திற்கு இடைக்கால தடை: உயர்நீதி மன்றம் அதிரடி

மதுரை:

மிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள லோக்ஆயுக்தாவுக்கு நியமிக்கப்பட்டுள்ள  உறுப்பினர்கள் 2பேர் நியமனத்திற்கு உயர்நீதி மன்றம் மதுரை கிறைள  இடைக்கால தடை போட்டுள்ளது.

உச்சநீதி மன்றம் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் லோக்ஆயுக்தா கொண்டு வரும் வகை யில்  கடந்த ஜூலை யில் சட்டப்பேரவையில்  சட்டம் முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, நடை முறைக்கு கொண்டு வரப்பட்டது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாஸ் உள்பட உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதுகுறித்து கடந்த  1ந்தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில்,  கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி லோக் ஆயுக்தா குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாசையும் அதன் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன் மற்றும் கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளருது. அவர்களுடன் டிஎன்பிஎஸ்சி  முன்னாள் தலைவராக இருந்து உயர்நீதிமன் றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ராஜாராம் மற்றும் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகியோரையும் உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளனர்.

இவர்களின் நியமனம், லோக் ஆயுக்தாவின் சட்டத்திற்கு எதிரானது என்றும், இவர்களது நியமன அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகிய  இருவரின் நியமனத்திலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிய வருவதாக தெரிவித்தனர்.  எனவே இருவரின் நியமனத்திற்கும் இடைக்காலத் தடை விதிப்பதாக, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை   22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.