சென்னை:

மிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்துள்ள தடையை எதிர்த்து, தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் தடையை நீக்க மறுப்பு தெரிவித்து உள்ளது.

மிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள லோக்ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் கடந்த 6ந்தேதி  இடைக்கால தடை விதித்தது.

இதை எதிர்த்து தமிழகஅரசு தரப்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க  மறுப்பு தெரிவித்து உள்ளது.

ச்சநீதி மன்றம் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் லோக்ஆயுக்தா கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.  தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தேவதாஸ் உள்பட உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனம் குறித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிஎன்பிஎஸ்சி  முன்னாள் தலைவராக இருந்து உயர்நீதி மன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ராஜாராம் மற்றும் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகியோர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டது,  லோக் ஆயுக்தாவின் சட்டத்திற்கு எதிரானது என்றும், இவர்களது நியமன அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்தில்  உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிவித்து, இருவரின் நியமனத்திற்கும் இடைக்காலத் தடை விதித்தனர்.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையின்போது, சென்னை உயர்நீதி மன்றத்தின் த டையை நீக்க வேண்டும் என்ற தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால்,  தடை நீக்க மறுத்த உசச்சநீதிமன்றம்  , சம்பந்தப்பட்ட வர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.