காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி பலியான தமிழக ராணுவ வீரர் உடல் மீட்பு

ஸ்ரீநகர்:

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 13ம் தேதி காஷ்மீரில் பாதுகாப்பு பணிக்காக சென்ற தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் மூர்த்தி காணாமல் போனதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று காஷ்மீர் பனிச்சரிவில் தமிழக ராணுவ வீரர் மூர்த்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.