அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த தமிழக அமைச்சர் யார் தெரியுமா?

சென்னை,

ரசு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் ஜெயக்குமார் அங்கு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். இது ஆசிரியர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இன்று பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வந்த ஜெயக்குமார் அங்குள்ள அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது  மாணவர்களின் படிப்பு திறன் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

அதைத்தொர்ந்து வகுப்பறைக்குள் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், ஆசிரியரிடம் இருந்து சாக்பீஸை வாங்கி கரும்பலகையில் ஆங்கிலத்தில், தலைமை செயலகம் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டியது யார் என்பது குறித்து எழுதி, அதற்கு பதிலும் எழுதினார். பின்னர் அதுகுறித்து மாணவர்களிடம் உரையாடினார்.

அமைச்சரின் இந்த செயல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.