1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழக பாடத்திட்டம் மாற்றம்: கருத்து கூற கால அவகாசம் நீடிக்கப்படும்: உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.

சென்னை,

மிழக பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருக்கின்றன. இதற்காக குழு அமைக்கப்பட்டு பாடத்தின் வரைவுத்திட்டம் பெறப்பட்டுள்ளது.

இது http://tnscert.org/tnscert/index.php?language=LG-1&status=Active என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

பாடத்திட்டம்  குறித்த தகவல்கள் ஆங்கிலத்தில் மட்டும் இருப்பதாகவும், இது குறித்து ஆலோசனை தெரிவிப்போருக்கான அவகாசமும் குறைவாக இருப்பதாகவும் கல்வி ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாலர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்ஸை தொடர்புகொண்டு பேசினோம்.

அதற்கு அவர், “இன்னும் இரு நாட்களில் இணையத்தில் தமிழிலும் பாட வரைவுத்திட்டம் பதிவேற்றப்படும். ஆலோசனை கூற தற்போது ஒருவார காலம்  அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் மேலும் நீட்டிக்கப்படும்” என்று நம்மிடம் தெரிவித்தார் பள்ளி கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன்.

 

Leave a Reply

Your email address will not be published.