கவுகாத்தி: கேலோ இந்தியா விளையாட்டுத் திருவிழாவில், 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்ட்ரோக் பிரிவில் தமிழகத்தின் தனுஷ் தங்கம் வென்று அசத்தினார். அதேசமயம், பதக்கப் பட்டியலில் தமிழகம் 9வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

அகில இந்தியா கேலோ விளையாட்டுத் திருவிழாவில் 21 வயதினருக்கான ஆண்கள் 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்டிரோக் நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில், போட்டி தூரத்தை 1 நிமிடம் 3.71 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார் தமிழகத்தின் தனுஷ்.

தமிழக நீச்சல் வீராங்கனை பாவிகா துகர் 17 வயதினருக்கான 200 மீட்டர் மற்றும் 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆண்கள் (21 வயதினர்) 50 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் தமிழகத்தின் ஆதித்யா தங்கப்பதக்கம் வென்றார். பளு தூக்குதல் போட்டியில் (17 வயதினர்) 49 கிலோ எடைப்பிரிவில், தமிழகத்தின் ரிதிகாவிற்கு வெண்கலமே கிடைத்தது.

இதுவரையான நிலவரப்படி, கேலோ விளையாட்டில், தமிழ்நாடு, 10 தங்கம், 22 வெள்ளி மற்றும் 12 வெண்லம் என மொத்தம் 44 பதக்கங்களுடன் 9வது இடத்தில் இருக்கிறது. 42 தங்கங்களுடன் மொத்தம் 150 பதக்கங்களைப் பெற்றுள்ள மராட்டியம் தொடர்ந்து முதலிடத்தில் கோலோச்சுகிறது.