டில்லி:

நாட்டின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தை சேர்ந்த காவல்துறையினர் 23 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும்  குடியரசுத் தினத்தின்போது, சுதந்திர தினத்தின்போதும், காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், காவலர்களுக்கும் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 70வது குடியரசு தின விழாவை முன்னிட்டு,  நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய 855 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினருக்கு குடியரசுத் தலைவர் காவலர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருது பட்டியலில், தமிழகத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 23 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அவர்களில், தகைசால் பணிக்கான குடியரசுத் தலைவர் விருது 2 பேருக்கும், பாராட்டத் தக்க வகை யில் பணியாற்றியதற்கான குடியரசுத் தலைவர் விருது 21 பேருக்கும் வழங்கப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சிறப்பு புலனாய்வுப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.கோவிந்தசாமி,  ஈரோடு சிறப்பு அதிரடிப்படை காவல் ஆய்வாளர் இ.சொரிமுத்து  ஆகிய 2 பேரும்  குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது பெறுபவர்கள்

சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையர் ச.மகேஸ்வரி,

ராமநாதபுரம் சரக டிஐஜி ந.காமினி,

ஊனமாஞ்சேரியில் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் காவல் கண்காணிப்பாளர் சு.சாந்தி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எம்.எம்.அசோக்குமார்,

சென்னை குற்றப்புலனாய்வுத்துறை சிறப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.ராஜேந்திரன்,

சென்னை குற்ற புலனாய்வுத்துறை பாதுகாப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கேசவன்,

சென்னை பல்லாவரம் உதவி காவல் ஆணையர் தேவராஜ்,

மதுரை மாவட்ட குற்ற ஆவணக்காப்பக காவல் துணைக் கண்காணிப்பாளர் எம்.வெற்றிச்செழியன்,

சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் கே.கனகராஜ் ஜோசப்,

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.சங்கர்

ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது கிடைத்துள்ளது.

மேலும், ஆவடி வீராபுரம் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை மூன்றாம் அணி உதவி தளவாய் எம்.ஆறுமுகம்,

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் கே.சங்கரசுப்பிரமணியன்,

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் எஸ்.ஜான்விக்டர்,

காஞ்சிபுரம் மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் வி.கணேசன்,

சென்னை குற்றப்புலனாய்வுத்துறை சிறப்புப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ஆர்.ஜனார்த்தனன்,

சென்னை குற்றப்புலனாய்வுத்துறை சிறப்புப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஜே.உலகநாதன்,

ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பி.முத்துராமலிங்கம்,

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் ஐ.சீனிவாசன்,

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையிட சிறப்பு உதவி ஆய்வாளர் எச்.குணாளன்,

சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் கே.புருஷோத்தமன்,

சென்னை குற்றப் புலனாய்வுத்துறை சிறப்புப் பிரிவு தலைமை காவலர் என்.பாஸ்கரன்

டில்லியில்நடைபெற உள்ள விழாவில், இந்த விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.