குடியுரிமை சட்ட எதிர்ப்பு: திமுக பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு

--

சென்னை: திமுக பேரணிக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக நாளை பேரணி நடத்த முடிவு செய்துள்ளது. பேரணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இ. கம்யூ, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 11 கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கின்றன.

பேரணியால் அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டது போல வன்முறை அபாயம் ஏற்படும். எனவே, பேரணிக்கு தடை கோரி இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந் நிலையில், திமுக பேரணிக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதுதொடர்பான கடிதம் ஒன்றை திமுகவுக்கு காவல்துறை வழங்கி உள்ளது.