சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி.யில் விலக்கு…மூளை நரம்பியல் மருத்துவர் சங்கம் வரவேற்பு

திருச்சி:

சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மூளை நரம்பியல் மருத்துவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இது குறித்து அதன் தலைவரும், திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வருமான டாக்டர் அலீம் கூறுகையில்,‘‘சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளித்தது வரவேற்கத்தக்க விஷயம். இதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இதன் மூலம் லட்சகணக்கான சிறுமிகள், பெண்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் சுகாதாரம் மற்றும் தூய்மையை ஊக்குவிக்கும்’’என்றார்.