தமிழகம் – புதுச்சேரி: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி நாளை சந்திப்பு

சென்னை: 

மிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களுடன்  நடிகர் ரஜினிகாந்த் நாளை சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், தனது ஒவ்வொரு படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியிடும் போது தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசுவது வழக்கம். அதுபோல தற்போது காலா படத்தின் வெளியிடு விரைவில் உள்ள நிலையில், கடந்த வாரம் காலா படத்தின் பாடல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெளிநாடு சென்று ஓய்வெடுத்த ரஜினி, சென்னை திரும்பியதும் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.

இதைத்தொடர்ந்து, நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள   ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவித்து உள்ளார்.

நாளை   காலை 10.30 மணிக்கு இந்த சந்திப்பு நிகழும் என்று கூறப் பட்டுள்ளது.