சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளில் 2வது கட்ட உள்ளாட்சி  தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் விறுவிறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 10.41% சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.  மொத்தம்91 ஆயிரத்து 975 உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்த தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 27-12-2019) முதல் கட்ட வாக்குப்பதிவு 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று 2வது கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

46,639 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. 158 ஊராட்சி ஒன்றியங்களில் 38 ஆயிரத்து 916 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 4,924 பஞ்சாயத்து தலைவர்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 ஊராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்தே தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கும், வாக்காளர்கள் முழு சுதந்திரத்துடன் தங்களது வாக்கினை செலுத்துவதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.