தமிழகம், குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்!: பி.ஆர்.பாண்டியன்

--

“குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்” என்று தமிழக அரசியல் கட்சிகளுக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்
இதனை வலியுறுத்தி ஜூன் 1 முதல் தஞ்சையில் தொடர் உண்ணாவிதம் இருக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்த பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளதாவது:

மத்திய அரசு தொடர்ந் து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. தமிழகத்திற்க்கு காவிரி பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து துரோகமிழைத்ததால் 400 விவசாயிகள் தற்க்கொலை, அதிர்ச்சி மரணமடைந்துள்ளனர்.குடிநீரிண்றி பறிதவிக்கும் போது 2000 கன அடி தண்ணீரை விடுவிக்க உச்ச நீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் மத்திய அரசு பெற்று தர மறுத்து விட்டது.

மீனவர்கள், நீட் தேர்வ உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகத்திற்க்கு எதிரான நட வடிக்கைகள் தொடர்வதால் தமிழகம் இந்திய வரைப்படத்தில் உள்ள தா என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாண்டும் ஜூன் 12ல் தண்ணீர் பெற்று தருவதற்க்கான வகையில் மேலாண்மை வாரியம் அமைக்க முன்வாவில்லை இனால் தமிழக விவசாயிகள் விவசாயத்தை இழந்து அகதிகளாக வெளியேறும் பேர பத்து ஏற்ப்பட்டுள்ளது.

இதற்க்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளும் குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென  வேண்டுகோள் விடுக்கிறோம். இதை வலியுறுத்தி வரும் ஜூன் 1 முதல் 5 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் தொடர் உண்ணாவிர தப் போராட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க்கின்றனர். அனைத்து இயக்கங்க ளும் ஆதரவளிக்க வேண்டுகிறோம்” – இவ்வாறு பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.