தமிழ்நாடு அரசு பேருந்துக் கட்டணம் உயர்கிறது

சென்னை

மிழ்நாடு அரசு பேருந்துக் கட்டணங்கள் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன

தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது.    தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக செய்திக்ள் வெளியாகி உள்ளன.   அதன்படி சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ. 3ஆக இருந்தது ரூ. 5 ஆக உயர்த்தப்பட உள்ளது.

சாதாரண பேருந்துகளில் கிமீக்கு 42 பைசாவில் இருந்து 60 பைசாவாக உயரும் என தெரிய வந்துள்ளது.  விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 56 பைசாவில் இருந்து 73 காசாகவும்  சூபர் டீலக்ஸ் பேருந்துகளில் 60 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும் உயர்த்தப் பட உள்ளது.   குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளின் கட்டணங்கள் அதிகபட்சம் ரூ.25 வரை உயரும் எனவும் கூறப்படுகிறது.

இந்த உயர்வின் படி தற்போது சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ. 325 ஆக உள்ள பேருந்துக் கட்டணம் ரூ. 440 ஆக உயர்த்தப்படும் என சொல்லப்படுகிறது.