தஞ்சை பெரிய கோவிலில் மீண்டும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வு

தஞ்சாவூர்:

ஞ்சை பெரிய கோயிலில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ராஜாராம் தலைமையில் போலீசார் மீண்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தஞ்சை பெரிய கோவிலில் இருந்த 41 பழங்கால சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. பந்தலூர் பசுபதீஸ்வரர் கோவிலில் சுமார் 200 தொன்மையான சிலைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் (செப்டம்பர்) 29ந்தேதி  தஞ்சை பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.  சிலை கடத்தல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த 50 போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார். இதன் காரணமாக பெரிய காவிலை காண சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

ஏற்கவே கடந்த  2 மாதங்களுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயிலில் சிலைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் பொன்.மாணிக்கவேல் ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வின்போது, சில சிலைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

மேலும், தஞ்சை அருகே புன்னைநல்லூரில் உள்ள சிவன் கோயிலிலும் சிலைகள் வைக்கப்பட்ட அறையில் பொன்.மாணிக்கவேல் நடத்திய ஆய்வில், அங்கும் சுமார் 10 சிலைகள் மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து ராஜராஜன் மற்றும் உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டது.

இதற்கிடையில் சென்னையில் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவ் வீடுகளில் ஏராளமான பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான பாரம்பரியமிக்க கோயில்கள் குறித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கோரி தொடரப்பட்ட வழகிக்ல,  அறநிலையத்துறை ஆணையர் , செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளத.